‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்துவுக்கும், ‘பகல் நிலவு’ ஷிவானி நாராயணனுக்கும் இடையே நெட்டிசன்ஸ் சண்டை மூட்டிவிட்டுள்ளனர்.

சின்னத்திரையிலும் சண்டை

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து பிரபலமான சித்து, பல நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அன்றாடம் ஒரு போட்டோ ஷூட் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எந்த ஒரு வம்பு தும்புகளிலும் மூக்கை நுழைக்காமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டிருந்த சித்துவை உசுப்பேத்தி விட்டுள்ளனர் ரசிகர்கள். வெள்ளித்திரை நடிகைகளின் சண்டை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது சின்னத்திரை நடிகைகளின் சண்டை தொடங்கிவிட்டது.

கவர்ச்சி புகைப்படம்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்து எந்த அளவிற்கு குடும்ப பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரோ, அதற்கு நேர்மாறாக ‘பகல் நிலவு’ ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டு இருப்பார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக, சித்ராவிடம் ஏதாவது கிளாமர் புகைப்படங்கள் இருந்தால் போஸ்ட் செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த சித்ரா, கிளாமர் புகைப்படங்கள் வேண்டும் என்றால் என்னுடைய இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள், 2000 ஆம் ஆண்டு பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு செல்லுங்கள் என கமெண்ட் போட்டுள்ளார். சித்ரா எதார்த்தமாக சொல்லப்போக, சித்ராவின் கமெண்டுக்கு அவரது ரசிகர்கள் ஷிவானியை தானே சொல்றீங்க என பெயரை பதிவிட்டு கேட்டது, சமூக வலைத்தளங்களில் பெருமளவு பரவியது. இதைக் கேட்ட ஷிவானி கடுப்பாகிவிட்டார்.

சண்டை மூட்டிய நெட்டிசன்ஸ்

இதற்கு, நடிகை சிவானி யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக கமெண்ட் போடுவது போல், “மற்றவர்களைப் பற்றி பேசும் முன் கூன் முதுகை பார் என்றும் என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் என் ரசிகை தான் என்றும் சில கொச்சையான வார்த்தைகளையும் சேர்த்து” தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமைதியாக இருக்கும் நடிகைகளுக்கு இடையே சண்டை போடும் விதமாக பிரச்சனைகளை பத்த வைத்துவிட்டனர் நெட்டிசன்கள். இவர்கள் இருவரும் பதிவிடும் பதிவுகளை பார்த்து மாறி மாறி கமெண்ட்டுகளை போட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஷிவானி பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்க போகிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வெளியில் இருக்கும் போதே இப்படி சண்டை போடுகிறாரே, பிக் பாஸ் வீட்டுக்குள்ளே சென்றால் என்ன நடக்குமோ என்று பல சர்ச்சையான பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here