சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ சீரியல் நடிகை பப்ரி கோஷ், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கி வருகிறார்.

அப்பாவின் ஆசை

பெங்காலி பெண்ணான பப்ரி கோஷ், நடிகையாக வேண்டும் என்பது அவரது அப்பாவின் கனவாம். அந்தக் கனவை நிறைவேற்றி வைத்த பப்ரி, ஒரு நடிகையாகவே தன் கேரியரை ஆரம்பித்தார். ‘கால்பிலா’ என்ற பெங்காலி படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான பப்ரி, தெலுங்கில் ‘யூத்ஃபுல் லவ்’ படத்தில் நடித்தார். பிறகு எஸ்.ஏ.சியின் “டூரிங் டாக்கீஸ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு ஓய், பைரவா, சக்கப்போடு போடு ராஜா, சர்கார், விஸ்வாசம் எனப் பல படங்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் “நாயகி” சீரியலில் கண்மணியாகவும், “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலில் கயல் என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் பப்ரி நடித்து வருகிறார்.

சீரியல் வாய்ப்பு

சமீபத்தில் ஒரு முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்த பப்ரி, தனது சினிமா வாழ்க்கை பற்றியும், கனவுகளைப் பற்றியும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது; அப்பாவின் ஆசைக்காக தான் ஆக்ட்டிங் பக்கம் வந்தேன். என்னதான் பெங்காலி , தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளில் நடித்தாலும், நாயகி சீரியலில் கண்மணியின் கதாபாத்திரம் மட்டுமே எனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்தது. சீரியலில் முதலில் நெகட்டிவ் கேரக்டருக்குத் தான் என்னை அழைத்தார்கள். ஆனால் எனது சுறுசுறுப்பும், பேச்சும் அனைவருக்கும் பிடித்துப் போக, பிறகு கண்மணி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விஜய் ரொம்ப சாஃப்ட்

விஜய்யுடன் “சர்கார்” படத்தின் அனுபவத்தை எப்பொழுதும் மறக்க முடியாது. விஜய் ஒரு கேள்வி கேட்டால், நான் பத்து பதில் சொல்வேன். பெங்காலி பெண் என்பதால் தமிழில் நிறைய பிழைகளோடு பேசிக் கொண்டிருந்தேன். தமிழில் நடிக்க நடிக்க அதில் இருக்கும் பிழைகளை குறைத்துக் கொண்டதால் விஜய்யும் “இப்போ நீங்க பேசும் தமிழில் மிஸ்டேக் குறைஞ்சிடுச்சு” என்று சொன்னார். இவ்வாறு பப்ரி பேசியுள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் பொழுதுபோக்கிற்காக பெயிண்டிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் பப்ரி கோஷ். மேலும் நடனம், பாடல், மாடலிங் போன்ற எல்லாம் அவருக்கு மிகவும் பிடிக்கும். அசைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிடும் பப்ரி, பெங்காலி உணவு என்றால் மூக்குமுட்ட சாப்பிட்டு முடித்துவிட்ட பிறகுதான் மற்ற வேலை பார்க்கவே செல்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here