கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
ஏற்ற, இறக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் எதிரொலியாலும் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடர்கின்றன.
மீண்டும் விலை குறைவு
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5003க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 70 காசுகள் குறைந்து ரூ.50.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.50,300க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற தன்மையால், தங்கம் மற்றும் வெள்ளி சந்தையும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.