தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து ஆன்லைனில் முறையான காரணங்களுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் கிடைக்கிறது.

இ பாஸ்

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த் தொற்று பரவுவதை தடுக்க திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல் வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று முதல் அமல்

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க ஏதுவாக, புதிய தளர்வுகளுடனான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் கிடைக்கிறது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இன்றி விண்ணப்பித்த நபர்களுக்கு இ-பாஸ் கிடைத்து வருகிறது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனே இ-பாஸ் தரப்படுகிறது. ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் இ-பாஸ் உடனே கிடைக்கும். 2 நாள் அனுமதி தரப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் மட்டுமே இ-பாஸூக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here