இனி வாரத்தின் ஏழு நாட்களும் சீரியல்களை ஒளிபரப்ப ஜீ தமிழ் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.
‘சீரியல்’
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், பல தொலைக்காட்சிகள் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற பழைய நிகழ்ச்சிகளையே மீண்டும் ஒளிபரப்பு செய்தது. முன்னணி சீரியல்களை போட்டி போட்டு வழங்கும் சன் டிவியும், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் தங்களின் பழைய சீரியல் எபிசோடுகளையே மீண்டும் ஒளிபரப்பின. சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்ததையடுத்து, சீரியல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இன்ப அதிர்ச்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி, ரெட்டை ரோஜா, என்றென்றும் புன்னகை, ராஜா மகள், நீதானே எந்தன் பொன்வசந்தம், கோகுலத்தில் சீதை, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, சத்யா போன்ற தொடர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இந்த தொடர்களின் புதிய எபிசோடுகளை இல்லத்தரசிகள், மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இனி வாரத்தின் ஏழு நாட்களும் சீரியல்கள் ஒளிபரப்பப்படும் என ஜி தமிழ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இது தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.