தேவையானவை
பன்னீர் – 250 கிராம்
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
முட்டை – 1 (நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்)
புதினா – 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பன்னீரை நன்கு பிசைந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலவையாகும் வரை கிளரவும். சிறிய உருண்டைகளாக உருட்டி பின்பு தட்டையாகத் தட்டிக் கொள்ளவும். இதனை முட்டையில் முக்கி எடுத்து 30 நிமிடங்கள் கழித்து கட்லெட் வடிவத்தில் தயார் செய்யவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு, கட்லெட்டை அதன்மேல் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் கட்லெட் தயார்.
நன்மைகள்
குழந்தைகளுக்கு மாலை நேர உணவாக கொடுக்கலாம். கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்தவை. உடல் எடையை பெருக்குவதற்கு சிறந்த உணவு.