தேவையானவை
இடியாப்பம் – 12
கேரட் – 1
பீன்ஸ் – 1
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
பிளம்ஸ் – சிறிதளவு
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு கேரட்டை சிறிது சிறிதாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது சூடாகிய பின் நெய்யை ஊற்றவும். பின்னர் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன்தொடர்ச்சியாக பீன்ஸ், பிளம்ஸ் மற்றும் கேரட்டை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். இறுதியாக மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு மற்றும் இடியாப்பத்தை வதக்கிய பொருட்களுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறினால், இடியாப்ப பிரியாணி தயார்.
நன்மைகள்
குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. எளிதில் செரிமானமாகும். வயிற்றுப் பிரச்சனையை ஏற்படுத்தாது.