நடிகை வரலட்சுமி இனிமேல் தான் நடித்து வெளியாகும் படங்களில் எல்லாம் தன்னுடைய பெயரின் டைட்டில் கார்டில் ‘மக்கள் செல்வி’ என்று போட வேண்டும் எனக் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மக்கள் செல்வி’

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், ஹீரோயின் மட்டும் இல்லாமல் குணச்சித்திர மற்றும் வில்லி கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தி வருகிறார். 2012ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலுன், தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, நீயா 2, சர்க்கார், மாரி 2 போன்ற படங்களில் நடித்த பின்னர்தான் அவருக்கு பெயரும், புகழும் கிடைத்தது. இதுமட்டுமின்றி தொலைக்காட்சி ஷோக்களிலும் கலந்துகொண்டு பிரபலமானார். வரலட்சுமி தற்போது ராஜபார்வை, வெல்வெட் நகரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நேற்று தனது 34வது பிறந்தநாளை வரலட்சுமி கொண்டாடினார். இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. அதில் அவரது பெயரின் டைட்டில் கார்டில் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

வரலட்சுமி விளக்கம்

ஜீ5 தளத்தில் வெளியாக உள்ள ‘டேனி’ திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் வரலட்சுமி. இந்த நிலையில், தனது பெயரின் டைட்டில் கார்டில் ‘மக்கள் செல்வி’ என்று போட வேண்டுமென தயாரிப்பாளர்களிடம் அவர் கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கமளித்துள்ள வரலட்சுமி, இந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது என்றார். தான் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவைகளும் செய்து வருவதால், தனக்கு பல அமைப்புகள் தான் இந்தப் படத்தை கொடுத்தனர் என்றும் தனது பெயருக்கு முன்னாள் அந்தப் பட்டத்தை போட சொல்லவில்லை எனவும் கூறினார். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்புத் திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த கீர்த்தி சுரேஷூக்கு ரசிகர்களால் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here