தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளித்துத்துள்ளார்.

பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் என தெரியாமலும் இருக்கிறது. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தத் தொடங்கிவிட்டன.
அமைச்சர் பதில்
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்க்கோட்டையன் பதில் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்களிடம் கருத்து கேட்டபிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்க்கோட்டையன் தெரிவித்தார்.















































