கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக நடிகை நமீதா 3 மொழிகளில் குறும்படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
மனம் கவர்ந்த நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இளைஞர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும் நமீதாவின் சொல்லுக்கு ரசிகர்கள் மயங்கியே போனார்கள். தமிழில் பட வாய்ப்புகள் குறையவே மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றார் நமீதா. மேலும் பிக் பாஸ் சீசன் 1, ரியாலிட்டி ஷோக்களின் நடுவர் என சின்னத்திரையிலும் கலக்கினார். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
குறும்படம் தயாரிப்பு
அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்ட அவர், பின்னர் பாஜகவில் சேர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் பதவியை பெற்றிருக்கிறார். இந்த நிலையில், தனது ரசிகர்களுக்காக கொரோனாவிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பான குறும்படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். 5 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்தில், கொரோனாவிடம் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவை சொல்லப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பது எப்படி? என்றும் விளக்கப்படுகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில், இந்த குறும்படம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.