மிகச்சிறந்த அனிமேஷன் படமான ஃப்ரோசன் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
அனிமேஷன் மோகம்
எத்தனை தமிழ் படங்கள் பார்த்தாலும் ஒரு ஹாலிவுட் பார்க்கிற சுகம் இருக்கே, அதற்கு ஈடு இணை எதுமே கிடையாது. அந்த வகையில் அனைவரையும் கவர்ந்த ஃப்ரோசன் திரைப்படம் மீண்டும் நம்மை வியக்க வைக்க வருகிறது. அமெரிக்கன் 3டி அனிமேஷன் படமான ஃப்ரோசன், 2013 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மூலம் வெளிவந்தது. இப்படத்தை வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்தது. ஃபேரி டேல் கதையை மையமாக வைத்து வெளிவந்த இப்படங்கள், குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் பிரமிப்பிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. பாடல்கள், அழகான காதல், பாசம், காமெடி போன்றவைகளை கொண்டுள்ளதாக இப்படம் அமைந்திருந்தது.
அனைவரையும் கவரும் டிஸ்னி
ஃப்ரோசன் திரைப்படத்தை எழுதியவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன். ஃப்ரோசன் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பு பெற்று வெற்றியானது. பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியது. அதைதொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான ஃப்ரோசன் 3 படத்தின் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. கூடிய விரைவில் இப்படம் வெளியாகும் என பல தரப்பிலும் செய்திகள் வெளிவந்துக்கொண்டே இருக்கிறது. முதல் பாகம் 2013ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டிலும் வெளியாகி வெற்றி அடைந்தது. இந்த இரண்டு படத்தின் தயாரிப்பிலும், தத்ரூபமான உருவாக்கத்திலும், அதிகநேரம் எடுத்துக்கொண்டதாக சொல்லப்பட்டன. 
தனித்துவமான அழகு
த லிட்டில் மெர்மெய்ட் என்ற படத்தில் மீன் மாதிரி இருக்கும் உருவத்தை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட அலாவுதீன் படத்தில் வரும் கதாபாத்திரத்தையும் அனைவரும் வியந்து ரசித்தனர். அனிமேஷன் படம் என்றாலே அனைவருக்கும் அதன்மேல் ஒரு தனி மோகம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ஒரு படத்தை பார்த்தாலே இரண்டு நாட்களுக்கு நம்மையும் ராணியாக மனதில் வைக்கத் தோன்றும் அளவிற்கு, அந்த கதாபாத்திரத்தில் நாம் ஒட்டிப்போவது இயல்பான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது ஃப்ரோசன் 3 படத்திற்கான போஸ்டரை பார்த்து அனைவரும் சந்தோஷத்திலும், ஆர்வத்திலும் உள்ளனர். ஒவ்வொரு கதையும் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான அம்சங்களை வலியுறுத்தும் வகையில் அமைந்திருக்கும். அதனால் பலரும் இப்படத்திற்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.















































