பீட்டர் பால் கையில் பைபிளை வைத்துக்கொண்டு வனிதாவிற்கு லிப்லாக் முத்தம் கொடுத்தது மிகப்பெரிய தவறு என நடன இயக்குநர் ராபர்ட் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
சர்ச்சை திருமணம்
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா, கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். வீட்டிலேயே மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனிடையே திருமணம் ஆன நாள் முதல் இன்றுவரை வனிதா ஏராளமான பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். தனக்கு முறையான விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது.
தவறான செய்திகள்
இதனிடையே, தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருக்கும் ராபர்ட் மாஸ்டரை வைத்து, இவ்விவகாரத்தில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விளக்கமளித்தார். ராபர்ட் கூறியிருப்பதாவது; ”நானும் வனிதாவும் எப்போதோ பிரிந்துவிட்டோம். எனக்கு இந்த கதையில் எந்த சம்பந்தமும் இல்லை. சிலர் அவர்களின் ஆதாயத்திற்காக, நான் வனிதா – பீட்டர் பால் திருமணத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக சொல்கின்றனர். இதனால் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்குதான் மனச்சங்கடம் ஏற்படுகிறது. இதுபோல தவறான செய்திகள் வரும் போது, நடிகர் சிம்பு ”எதையும் காதில் வாங்கிக்கொள்ள வேண்டாம். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுட்டு போ” என்று அட்வைஸ் கொடுத்தார்.
மிகப்பெரிய தவறு
மேலும், வனிதாவைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அவர் இன்னும் திருந்தவில்லை. நானும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் தான். ஆனால், பீட்டர் பால் கையில் பைபிளை வைத்துக்கொண்டு வனிதாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தது மிகப்பெரிய தவறு. இதை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று ராபர்ட் விமர்சித்துள்ளார்.