25 ஆண்டுகளாக தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை அமைத்திருக்கும் அமேசான் நிறுவனம் கொரோனா பிரச்சனையால் தனது விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.
அமேசான்
அமேசான் என்பது அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். வாஷிங்டனில் உள்ள இந்த நிறுவனம் அமெரிக்காவிலேயே இருக்கும் மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை “ஸ்டெப் பிளஸ்” நிறுவனத்தினை விட மூன்று மடங்கு அதிகம்கும்.
உலக பணக்காரர்
ஜனவரி 12, 1964ல் பிறந்த ஜெப் பெசோஸ் என்பவர் தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார். இவருடைய சொத்தின் மதிப்பு 83 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது. தற்போதைய கணக்குப்படி இவர்தான் உலகிலேயே பெரும் பணக்காரர். இவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, அதில் 71 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கிறார்.
உலக நாடுகளில் கிளைகள்
1994ம் ஆண்டு அமேசான் டாட் காம் நிறுவத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ், அதனை 1995ம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். முதலில் இது ஒரு இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை குறுந்தட்டுகள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக் பொருட்கள், ஆடைகள், உணவு மற்றும் பொம்மைகள் ஆகும். அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிறுவியுள்ளது. அவை கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.
பிற தொழில்கள்
இணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் அமேசான் ஈடுபட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013ல் விலைக்கு வாங்கினார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தக் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும், சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது. ஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998ல் 2,50,000 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தார்.
அறக்கட்டளை
ஜெப் பெஸோஸ் தனது மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார். கல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது. சியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்தார்.
கொரோனாவால் வீழ்ச்சி
அமேசான் நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்தின் மதிப்புமிக்க நிறுவனங்களில் அமேசானும் ஒன்று. ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்ட அமேசான், இந்தளவுக்கு சாதித்ததும், அந்நிறுவனத்தின் வணிகம், அதன் பொருளாதாரம் நம்மை வியக்க வைக்கிறது. கடந்தாண்டு அந்த நிறுவனத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக அமேசான் உள்ளது. அமேசானின் ஆண்டு வருமானமும் அனைவரையும் மலைக்க வைக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் விற்பனை 275.06 பில்லியன் டாலராக இருக்குமென்றும், 2020 இறுதிக்குள் அதன் வருமானம் 320 பில்லியன் டாலராக இருக்குமென்றும் கணிக்கப்பட்டது. ஆனால் அது இப்போது கொரோனாவால் தகர்க்கப்பட்டது.