நான்காம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டர். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பணி செய்ய விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என்றும் கட்டுமானப் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். சென்னையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வர மக்கள் ஒத்துழைப்பு தேவை எனக் கேட்டுக்கொண்ட அவர், பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.