சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்
இலங்கை இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். 1972-க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. 1972-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது.
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான துறைமுகம் என்பன புராதன பட்டுப்பாதை காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இலங்கை பல சமய, இன, மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.
இலங்கை வளமான பெளத்த மரபுரிமையைக் கொண்டு, முதலாவது பெளத்த படைப்புக்களை இத்தீவில் உருவாக்கியது.
நிகழ்வுகள்
1809 – வியன்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
1834 – இலங்கை சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
1840 – நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடு கடத்துதல் நிறுத்தப்பட்டது.
1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
1915 – ஸ்காட்லாந்தில் ஐந்து ரெயில்கள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிகோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
1958 – இலங்கை இனக்கலவரம் – இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – வடக்கு ஏமன் மற்றும் தெற்கு ஏமன் ஆகியன இணைந்து ஏமன் குடியரசு ஆகியது.
1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.