தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்டப் பதிவாளரான என். சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

வழக்கு

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

விசாரணை

மேலும், தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிறப்பு அதிகாரியான ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், ஜூன் 30 என்கிற தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், “தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து அக்டோபர் 30ம் தேதிக்குள் சிறப்பு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here