பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து நடிகை கஸ்தூரி “உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா” என டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழக அரசும், சுகாதாரத்துறையும் முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, தமிழகம் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற்ற போராடி வருகிறது.

நிறம் மாறிய கிருஷ்ணகிரி

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் பச்சை மண்டலம் என கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியின் நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் அந்த முதியவர் உட்பட 3 பேர் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனால் அவருடன் சென்ற 3 பேர் மற்றும் அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  ஆகவே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. 

கஸ்தூரி டுவிட்

இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா.. பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அரியலூர் மாவட்டமும் ஆரஞ்சு கலரில் இருந்து ரெட் கலருக்கு சென்றுவிட்டது. கோயம்பேட்டில் இருந்து தொற்றை பரப்பியவர்களுக்கு நன்றி. கோயம்பேடு மார்க்கெட் இப்போது வைரஸ் மார்க்கெட் ஆகிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here