‘மாஸ்டர்’ திரைப்படம் இணையதளத்தில் ரிலீசாவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே என படக்குழு தெரிவித்துள்ளது.

‘மாஸ்டர்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மாதம் 9-ந் தேதி ரீலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

ஓடிடியில் ரிலீஸ்?

இந்த நிலையில், ஜோதிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதேபோல், விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

மறுப்பு

இதனை மறுத்துள்ள படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார், “மாஸ்டர்” திரைப்படம் இணையதளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்பது வெறும் வதந்தியே எனத் தெரிவித்தார். பல கோடி ரூபாய் செலவில் உருவான ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில்தான் வெளிவரும் என்றும் இணையதளத்தில் ரிலீஸ் ஆகாது எனவும் லலித்குமார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here