சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டாடும் மக்கள்
இதனால் சாதாரண தினக்கூலி பணியாளர்கள் வருவாய் இன்றி நாள்தோறும் தவித்து வருகின்றனர். இதுபோன்று துயரப்படும் மக்களுக்கு அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட திரைப் பிரபலங்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.















































