கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இளைஞர்கள் தேவையற்ற காரணங்களை கூறி ஊர் சுற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்களை கைது செய்யும் போலீசார், பின்னர் விடுவித்து வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்கின்றனர்.

மரண பயம்

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்குரோடு சந்திப்பில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, தேவையின்றி ஊர் சுற்றிய இளைஞர்கள் சிலரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்ற முற்பட்டபோது, வாகனத்தினுள் கொரோனா நோயால் பாதித்தவர் போன்று உடையணிந்த ஒருவரை கண்டு இளைஞர்கள் அலறினர். போலீசாரின் இந்த நூதன விழிப்புணர்வு இளைஞர்களுக்கு மரண பயத்தை காட்டியுள்ளது. அதன் முழுமையான வீடியோ தொகுப்பு “Littletalks plus” யூடியூப் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here