“சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 -ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

5 மாநகராட்சிகளில் ஊரடங்கு

இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-ம் தேதி காலை 6 மணி முதல்  29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here