தமிழக உணவுகளில் சேர்க்கப்படும் ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதாக விஞ்ஞானி டாக்டர் மாரியப்பன் கணித்துள்ளார்.
விஞ்ஞானி கணிப்பு
மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் மூத்த இந்திய துணை இயக்குநராக உள்ள விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன், இந்தியர்கள் உட்பட தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் பரம்பரை ரீதியாக நன்கு பாதுகாக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார். அவர்கள், வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான, சக்திவாய்ந்த மரபணுக்களை கொண்டுள்ளனர் என்றும் 2003ல் சார்ஸ் வைரஸ் வெடித்தபோது, மற்ற நாடுகளில் ஏராளமான பாதிப்புகள் இருந்த போதும் இந்தியா சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், கோவிட்-19 மற்றும் SARS CoV-2, வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.