தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படலாம் எனக் கருதப்படும் நிலையில், மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆட்கொல்லி வைரஸ்

கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. பல லட்சம் பேர் நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய – மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுரை

இந்த நிலையில், ஊரடங்கு முடிந்தவுடன் மே 4-ம் தேதி முதல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தெரிகிறது. இதற்காக, சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதில்,

  1. அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
  2. மணிக்கு ஒருமுறை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  3. பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.
  4. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
  5. பஸ்களை இயக்கும்போது, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
  6. பணியில் இருப்பவர் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  7. ஆரோக்கிய சேது எனப்படும் செல்போன் ஆப் டவுன்லோட் செய்யப்படவேண்டும்.

போக்குவரத்து கழகம்

இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, போக்குவரத்து கழகம் அறிவுரைகளை வழங்கி கட்டுபாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here