தெலுங்கு திரையுலகினரிடையே பிரபலமாகி வரும் வீட்டு வேலை செய்யும் சேலஞ்சில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அழைத்துள்ளார்.
சேலஞ்சுக்கு ரெடியா?
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் பொழுதுபோகாமல் சில சேலஞ்சுகளை சக நடிகர்களுக்கு விடுத்து வருகின்றனர். சமீபத்தில் வீடு துடைத்து, பாத்திரம் கழுவி வீட்டு வேலைகள் செய்வதை வீடியோ எடுத்து டிவிட்டரில் வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., இதேபோன்று வீட்டு வேலைகள் செய்து வீடியோ வெளியிடும்படி தெலுங்கு ஸ்டார் நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு சவால் விடுத்தார்.
ரஜினிக்கு அழைப்பு
இதையேற்று வெங்கடேஷ் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் வீட்டு வேலை செய்வது சமைப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, இந்த சவாலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தெலுங்கில் தொடங்கிய இந்த வீடு சுத்தம் செய்யும் சேலஞ்ச் தற்போது தமிழகத்திலும் நுழைந்திருகிறது.