ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிப்பது குறித்து திருமலை – திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தரிசனம் ரத்து
0 3
கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதி – திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை…
by adminApril 15, 2020Anmigam – Astrology
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிப்பது குறித்து திருமலை – திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தரிசனம் ரத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூலிகை கிருமி நாசினி
கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கோவிலுக்கு வெளியே துளசி, கற்றாலை உள்ளிட்ட மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக ஊழியர்கள் உள்ளே செல்லும் போது இயற்கை கிருமி நாசினி தெளிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேவஸ்தானம் ஆலோசனை
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு, அன்னபிரசாத கூடம், வைகுண்ட காத்திருப்பு அறை, கல்யாண கட்டா, ஏழுமலையான் கோவில் மகாதுவாரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியாக பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.