ஏழைகளுக்கு தனது சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய விவகாரத்தில் தனது மகனை நினைத்து பெருமைப்படுவதாக ஹாலிவுட் நடிகர் ஜாக்சி சான் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த நடிகர்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த ஜாக்கி சான், ஸ்டன்ட் மேனாகி பிறகு குங்ஃபூ படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1978 ஆம் ஆண்டு வெளியான ஸ்னேக் இன் த ஈகில் ஷேடோவ் என்ற படம் மூலம் அனைவராலும் அவர் கவனிக்கப்பட்டார். இவர் படங்களில் இடம்பெற்ற காமெடி கலந்த ஆக்‌ஷ#Cinamenwsன் காட்சிகள், அதிக வரவேற்பை பெற்றதால் மக்கள் மத்தியில் இவர் ஒரு நிலையான அங்கிகாரம் பெற்றார். இவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நன்கொடை

இதற்கிடையில் ஜாக்கிசான் தனது ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். ஏழை மக்களுக்காக தனது சொத்துக்களை வழங்கியுள்ள ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பெருமை

இந்நிலையில், ஜாக்கி சானின் மகன் வாரிசு என்பதற்காக அப்பாவின் சொத்துக்களை பெற விருப்பவில்லை என்று கூறியுள்ளார். ஜாக்கி சான், தன்னுடைய சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கி விட்டேன் என என் மகனிடம் “உனக்கு எவ்வித வருத்தமும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு என் மகன் ‘ஜேசி சான்’ நானும் திறமைசாலிதான், தானாகவே உழைத்து பணம் சம்பாரிக்க விரும்புகிறேன். நீங்கள் சம்பாதித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காக கொடுப்பதில் எந்த அர்த்தமுமில்லை. பிறர் உதவியின்றி உழைப்பின் மூலம் நானும் முன்னேற ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டான்” என்று ஜாக்கி சான் பெருமையுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here