பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் 3வது முறையாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
முன்னணி நடிகை
மோகன்லாலின் தன்மந்த்ரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மீரா. அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விவாகரத்து
2005 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளரின் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மீரா மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். அதன்பிறகு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை மீரா திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், தனது கணவர் விபினை விவாகரத்து செய்ததாக நடிகை மீரா வாசுதேவன் தற்போது அறிவித்துள்ளார்.

“ஐ எம் சிங்கிள்”
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது; “2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.















































