திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும் என விமர்சித்தார்.

பிரச்சாரம்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் களத்திற்கு தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்திற்கு தயாராகிவிட்டது. அதன் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். இன்று காலை நாகையில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், அதன்பிறகு திருவாரூரில் பிரச்சாரம் செய்தார்.

கருவாடு

அப்போது தவெக தலைவர் விஜய் பேசியதாவது; “திருவாரூர்னாலே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகம் வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க? இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வெச்சோம்னு மார்தட்டி சொன்னது யாருனு உங்களுக்கே தெரியும். ஆனால், அவரோட மகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்ப என்ன செய்றாங்க? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடுங்குற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு. திருவாரூர் மாவட்டம்தான் அவங்களோட சொந்த மாவட்டம்னு பெருமையா சொல்லிக்குறாங்க. ஆனா, திருவாரூர் இங்க கருவாடா காயுது.

50 வருஷ கோரிக்கை

திருவாரூர் ஒரு மாவட்டத்தோட தலைநகர். ஆனா, பஸ் ஸ்டாண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைல இருந்து சரியா ரோடு இல்லை. கும்பகோணம் – ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் – நீடாமங்கலத்துக்கு ரயில் பாதை வேணும்ங்குற கோரிக்கை 50 வருஷமா நிறைவேறாம இருக்கு. இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு. அவரோட வேலை என்ன தெரியுமா? முதலமைச்சர் வீட்டுக்கு சேவை செய்யுறது. மக்கள்தான் முக்கியம்னு அவருக்கு நாம புரிய வெக்கனும். உங்களுடன் ஸ்டாலின். உங்களுடன் ஸ்டாலின்னு உங்க குடும்பத்துக்கு மட்டும்தான் சொல்லிக்கணும். மக்கள் கிட்ட எல்லாம் அதை சொல்லவே முடியாது. ஏன்னா நீங்கதான் மக்கள் கூடவே இல்லையே.

நோ காம்ப்ரமைஸ்

நான் அரியலூர்ல சொன்னதை திரும்பவும் உங்க கிட்ட சொல்றேன். தீர்வை தேடி போறதுதான் நம்ம லட்சியமே. நம்ம தேர்தல் அறிக்கைல அதுக்கான விளக்கத்தை தெளிவா கொடுப்போம். பொய்யான அறிக்கை கொடுக்க மாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டும்தான் சொல்லுவோம் அதை மட்டும்தான் செய்வோம். கல்வி, ரேஷன், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை தேவைகளில் நோ காம்ப்ரமைஸ். சிம்பிளா சொல்லனும்னா ஏழ்மை இல்லாத தமிழகம். ஊழல் இல்லாத தமிழகம். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம். உண்மையான மக்களாட்சி. மனசாட்சி உள்ள மக்களாட்சி. கான்பிடண்ட்டா இருங்க மக்களே. வெற்றி நிச்சயம்”. இவ்வாறு விஜய் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here