சோஷியல் மீடியாவில் இருக்கும் ஆட்களுக்கு பணம் கொடுத்து தன்னை கலாய்க்கச் சொல்கிறார்கள் என்று நடிகை ப்ரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
ட்ரோல்ஸ்
சுஜித் இயக்கத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யான் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் OG. வரும் 25 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ப்ரியங்கா மோகன். இந்நிலையில் படக்குழுவினர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்பொழுது ட்ரோல்ஸ் குறித்து பேசியிருக்கிறார் நடிகை ப்ரியங்கா மோகன்.
“டோன்ட் கேர்”
இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ப்ரியங்கா மோகன் பதிலளிக்கையில்; “காசு கொடுத்து என்னை கலாய்க்கச் சொல்கிறார்கள். என்னை பிடிக்காதவர்கள் தான் ட்ரோல் செய்பவர்களுக்கு காசு கொடுத்து என்னை டார்கெட் செய்யச் சொல்கிறார்கள். அது யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பணம் வாங்குபவருக்கு தெரியும். மீம்ஸ் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. என்னை பற்றி வரும் மீம்ஸுகள் பார்த்து நான் உடைந்து போவதும் இல்லை. மாறாக வலுவானவளாக ஆகிக் கொண்டிருக்கிறேன். யார் மீம்ஸ் போட்டால் எனக்கென்ன” என்று அவர் கூலாக தெரிவித்துள்ளார்.