தன்னைப் பற்றி பரவும் செய்திகளை படிக்கும்போது சிரிப்பு வருவதாக நடிகை ஹன்சிகா தெரிவித்திருக்கிறார்.
முன்னணி நடிகை
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த ஹன்சிகாவிற்கு, ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. சமீபகாலமாக உடல் எடையை கணிசமாக குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அவர் அதிர்ச்சி அடையச் செய்தார். நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் மிகவும் கோலாகலமாக நடந்தது.
விவாகரத்து?
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ஹன்சிகா, மும்பையில் உள்ள தனது தாய் வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது. கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் எனவும், விரைவில் விவாகரத்து முடிவை ஹன்சிகா நாட இருப்பதாகவும் பேசப்பட்டது. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களுக்கு இதுவரை ஹன்சிகா மோத்வானி கருத்து எதுவும் கூறாமல் இருந்தார். இதனால் ஹன்சிகாவின் தனிப்பட்ட செய்திகள் வைரலாக தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
சிரிப்பு வருது
இதனிடையே நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது. “என் வாழ்க்கையைப் பற்றிய மக்களின் கருத்துக்களை நான் படிக்கும் போது சிரிப்பாக வருகிறது” என்பது போன்று ஒரு எமோஜியை பகிர்ந்துள்ளார். நடிகை ஹன்சிகா தற்போது விடுமுறையை கொண்டாடுவதற்காக பாலிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.