பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
முன்னணி நடிகை
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஐயா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நயன்தாரா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.
மனமுருகி வழிபாடு
இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது கனவரும், இயக்குருமான விக்னேஷ் சிவன் மற்றும் இரு குழந்தைகளுடன் பழனிக்கு வந்தார். ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு சென்ற அவர், தண்டாயுபாணி சுவாமியை வைதீகாள் அலங்காரத்தில் தரிசித்து வழிபட்டார். அதனைதொடர் தொடர்ந்து போகர் சன்னதியிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த நயன்தாரா, அங்கு சூழ்ந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்றார்.