தன்னுடைய முதல் காதல் ஒரு கார் விபத்தால் முடிவுக்கு வந்ததாக பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்திருக்கிறார்.

சிறந்த நடிகை

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ப்ரீத்தி ஜிந்தா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். 1998 இல் ‘தில் சே’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானா ப்ரீத்தி ஜிந்தா, இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் உள்பட பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார்.

அதீத விருப்பம்

கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை. கிரிக்கெட்டின் மீதான அதீத விருப்பத்தால் ஐபிஎல் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியை வாங்கினார். கடந்த 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத போதும் தீரமுடன் சீசன்களில் நின்று அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்.

முதல் காதல்

இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ’கல் ஹோ நோ ஹோ’ என்ற திரைப்படம் தற்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் க்ளைமேஸ் காட்சியில், நாயகன் ஷாருக் கான் ஒரு விபத்தில் இறப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும். அந்த க்ளைமேக்ஸ் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த ப்ரீத்தி ஜிந்தா “அந்த க்ளைமேக்ஸ் காட்சியை இப்போது பார்த்தாலும் நான் அழுகிறேன். அதை படமாக்கும் போதும் நான் அழுதேன். என்னுடைய முதல் காதல் ஒரு கார் விபத்தால் முடிவுக்கு வந்தது” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here