நடிகர் ரஜினிகாந்திடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி
நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘ரெட்ரோ’ இப்படத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பட குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர். அதன்பிறகு நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்; “சூர்யா ஒரு மிகச்சிறந்த நடிகர். இந்த படத்தில் நடித்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இரண்டாவது வாரமாக ‘ரெட்ரோ’ திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் முதல் குடும்பத்தினர் வரை அனைவருக்கும் இந்த படம் பிடித்திருப்பதாக கூறுகின்றனர்.
ஓகே சொன்னா போதும்
‘ரெட்ரோ’ படத்தின் கதையைக் கேட்டவுடன் சூர்யா அதில் நடிக்க சம்மதித்தார். ‘பேட்டை’ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திடம் ஒரு கதை சொல்ல வேண்டும். அந்த கதை அவருக்கு பிடித்துவிடும் பட்சத்தில் மீண்டும் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவேன். ‘என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த’ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட காட்சி ஒன்றை படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து மிகுந்த சவாலுடன் படம் பிடித்தனர். அந்தமான் சென்று படப்பிடிப்பு நடத்தியது ஒரு சவாலான அனுபவம். சண்டைக் காட்சிகளுக்காக தாய்லாந்தில் இருந்து ஒரு சண்டை பயிற்சியாளரை அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியது எனக்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது” என்றார்.