பாலிவுட்டில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகை கங்கனா ரனாவத் ஹாலிவுட்டில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

சர்ச்சை நாயகி

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘தாம்தூம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதன்பின் சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவரே இயக்கி நடித்து தயாரித்த ‘எமர்ஜென்ஸி’ படம் ரிலீஸாகி அதுவும் தோல்விப் படமாக அமைந்தது.

பாலிவுட் டூ ஹாலிவுட்

நடிகை கங்கனா ரனாவத் நெப்பாடிசம் மட்டுமில்லாமல், பல சர்ச்சையான அரசியல் சார்ந்த கருத்துக்களையும் வெளியிட்டு வருவார். சோசியல் மீடியாக்களில் சர்ச்சை நாயகியாக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அனுராக் ருத்ரா இயக்கவுள்ள ‘blessed be the evil” என்ற ஹாரர் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கங்கனா.  இதில் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு நியுயார்க் நகரில் தொடங்கவுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here