பிரபல நடிகர் மகேஷ் பாபு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மோசடி
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரே நிலத்தை பலருக்கு விற்றிருப்பது கண்டறியப்பட்டது.
சம்மன்
இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் மகேஷ் பாபு உள்ளதால், இந்த முறைகேடு வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஏப்.,27 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.