இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”. வரும் ஏப்ரல் 24 ஆம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் வடிவேலு, “கேங்கர்ஸ்” படத்தில் காட்சியையும் இயக்குநர் சுந்தர்.சி ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்களுக்கு தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருப்பதாகவும் கூறினார். இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம் என்றும் வடிவேலு தெரிவித்தார்.