நடிகர் விஜய் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி மே மாதத்திலிருந்து முழு நேர அரசியல்வாதியாக தன் பயணத்தை துவங்கவுள்ளார். ஆனால் விஜய்யிடம் அவரது முடிவை மாற்றுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்களும் விஜய் தொடர்ந்து நடிக்கவேண்டும் என்றுதான் சொல்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிபி சத்யராஜும் தற்போது கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்; “விஜய் அண்ணா தொடர்ந்து நடிக்க வேண்டும், அவருக்கு எங்களின் ஆதரவு கண்டிப்பாக உண்டு. இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிங்க விஜய் அண்ணா ப்ளீஸ்” என கேட்டுள்ளார்.