சத்யா மற்றும் ஸ்ரீகுமார் நடிக்கும் ‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதியை விஜய் டிவி அறிவித்துள்ளதால் சீரியல் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
‘புதிய தொடர்’
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘எதிர்நீச்சல்’. இத்தொடரில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சத்யா, தற்போது ‘எதிர்நீச்சல் 2’ தொடரிலும் நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சத்யா ‘தனம்’ எனும் புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இத்தொடரில் அவருக்கு ஜோடியாக ‘வானத்தை போல’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்ரீகுமார் நடிக்கிறார்.
‘ஒளிபரப்பு தேதி’
‘தனம்’ தொடரில் ஆட்டோ ஓட்டுநராக நடிக்கிறார் ஸ்ரீகுமார். அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை எப்படி கவனித்துக்கொள்கிறார் என்பதே இத்தொடரின் மையக்கருத்து. ‘தனம்’ தொடர் பிப்., 17 ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.