சத்தீஸ்கரில் அரசு திட்டத்தில் மோசடி செய்த நபருக்கு நடிகை சன்னி லியோன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மோசடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாஸ்டர் மாவட்டம் தலுர் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திரா ஜோஷி என்பவர் ரூ.1,000 தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தில் நடிகை சன்னி லியோன் – ஜானி சின்ஸ் தம்பதி என குறிப்பிட்டு தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அந்த வங்கிக் கணக்கிற்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டதுடன், விரேந்திரா ஜோஷி மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
கண்டனம்
இந்த மோசடி குறித்து அறிந்த நட்கை சன்னிலியோன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “சத்தீஷ்கரில் எனது பெயர், அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி நடந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.