புஷ்பா 2 பட ரிலீஸின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனிடம் தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் புஷ்பா 2. இப்படம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்க்கச் சென்றுபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். படுகாயமடைந்த அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 17 பேர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
விசாரணை
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி அவர் நேற்று காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் 15 கேள்விகளுக்கு அல்லு அர்ஜுன் விரிவான பதிலளித்தாக தெரிகிறது. மேலும் 5 கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தேவைப்பட்டால் மீண்டும் அல்லு அர்ஜுநிடம் விசாரணை நடத்துவோம் எனவும் எப்போது வேண்டுமானாலும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் எப்போது அழைத்தாலும் வர தயாராக இருப்பதாக நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துருக்கிறார்.