”விடுதலை 2” திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அப்படக்குழு இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களின் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
ஹீரோவான சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சூரி. முதல் படத்திலேயே பல ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட நடிகர் சூரி, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார். காமெடி நடிகராக இதுவரை இருந்து வந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் விஜய் சேதுபதியும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது.
சூப்பர் ஹிட்
முதல் பாகத்தில் சூரி ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் வெளியான ”விடுதலை 2” திரைப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை நாயகனாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான விடுதலை 2 திரைப்படம் வெற்றிநடைபோட்டு வருகிறது. விஜய் சேதுபதி, சூரி உட்பட படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேர்ல் நன்றி
இந்நிலையில், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள விடுதலை – 2 படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெற்றிபெற்றுள்ளதால் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து அவரின் பங்களிப்பிற்கான நன்றியை தெரிவித்தனர்.