சென்னையில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஐய் வழங்கினார்.

மழை – பாதிப்பு

கடந்த சில தினங்ககுக்கு முன்பு உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம், காரைக்கால், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

நிவாரணம்

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில், பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி, அவர்களுடன் உரையாடினார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விமர்சனம்

மக்கள் வெள்ளத்தில் தவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்காமல், தன்னுடைய பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து நிவாரணம் தருவது சரியான செயலா? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால், விஜய் ஒரு பிரபலமான நடிகராகவும் இருப்பதால், தற்போதைய சூழலில் அவர் களத்திற்கு சென்றால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கணித்தே, அவர் தனது பனையூர் வீட்டில் வைத்து நிவாரண உதவிகளை வழங்கியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here