கவர்ச்சியாக நடிக்கும் அனுபவத்தை பெறவே “ஊ சொல்றியா மாமா” பாடலில் நடித்ததாக நடிகை சமந்த தெரிவித்துள்ளார்.

ஹிட் படங்கள்

தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. நான் ஈ படத்தின் மூலம் பல ரசிகர்களை உருவாக்கினார். தெலுங்கு மற்றும் தமிழில் அதிகம் கவனம் செலுத்தி வந்த சமந்தா, கத்தி, தங்க மகன், தெறி, மெர்சல் என்று முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிய தொடங்கினார். சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்தார்.

முன்னணி நடிகை

சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் மூலம் சமந்தாவின் வேறு பரிமாணத்தை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. விவாகரத்து, மையோசிட்டிஸ் என்ற அரியவகை நோய், சர்ச்சைகள் என பல இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தற்போதும் முன்னிலை நடிகையாக முன்னேறி வருகின்றார் சமந்தா.

பயந்தேன்

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனம் ஆடும்போது பயந்து நடுங்கியதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியதாவது; “கவர்ச்சியாக நடிப்பது எனக்குத் தெரிந்தது அல்ல. அந்த அனுபவத்தை பெறவே அப்பாடலில் நடித்தேன். முதல் ஷாட்டின்போதே பயம் ஏற்பட்டது. பேமிலிமேன் தொடரில் எப்படி நடித்தேனோ அதேபோல தான் இப்பாடலுக்கும் நடனமாடினேன். ஒரு பெண்ணாக இருப்பதன் சிரமங்களையும் சந்தித்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here