ஜூலை 1 ஆம் தேதி முதல் சரிகமப லிட்டில் சேம்ப் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்க இருக்கிறது.
லிட்டில் சேம்ப்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ”சரிகமப”. சீனியர்களுக்கான இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக புருஷோத்தமன் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி முதல் ”சரிகமப” நிகழ்ச்சியின் லிட்டில் சேம்ப் சீசன் 3 கோலாகலமாக தொடங்க உள்ளது.
௷கா ஆடிஷன்
எக்கச்சக்கமான குழந்தைகள் இந்த நிகழ்ச்சியின் ஆடிஷனில் பங்கேற்க, 20 முதல் 25 திறமையான போட்டியாளர்களை மெகா ஆடிஷன் மூலமாக தேர்வு செய்ய உள்ளனர். இந்த மெகா ஆடிஷன் எபிசோடுகள் தான் வரும் ஜுலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. வழக்கம்போல அர்ச்சனா இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பிரபல நடிகை அபிராமி ஆகியோர் இந்த சீசன் முழுவதும் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். மெகா ஆடிஷனில் மட்டும் இவர்களுடன் இணைந்து வைக்கம் விஜயலட்சுமி மற்றும் மனோ ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். லிட்டில் சேம்ப் சீசன் 3 நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.