போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை சுரேக ராணி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சை

தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் சுரேகா வாணி. இவர் தமிழில் மெர்சல், விஸ்வாசம், ஜில்லா, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கே.பி.சவுத்ரியுடன், நடிகை சுரேகா வாணி நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியானது. இதனால் போதைப்பொருள் விவகாரத்தில் சுரேகா வாணியை தொடர்புபடுத்தி வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சுரேகா வாணி வீடியோ மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “கொஞ்ச காலமாக என்மீது தவறான குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இந்த சர்ச்சைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற வதந்திகளால் எனது சினிமா வாழ்க்கையும், எனது குழந்தைகளின் எதிர்காலமும், எனது குடும்பம் மற்றும் எங்களின் ஆரோக்கியம் எல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தயவுசெய்து எங்கள் மீது இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்தி விடுங்கள். எங்களை புரிந்து கொள்ளுங்கள். நன்றி” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here