சாலை விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை யாஷிகாவிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
விபத்து
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நடிகை யாஷிகா ஆனந்த் நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு வீடும் திரும்பினார்.
பிடிவாரண்ட்
இந்த விபத்து தொடர்பாக மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனது மார்ச் மாதம் 21ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை எனக் கூறப்ப்டுகிறது. எனவே நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.