2022-ம் ஆண்டு இந்தியர்கள் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து முதலிடம்

2022-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களை ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி வெளியிட்டுள்ளது. இதுக்குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; நடப்பாண்டில் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. ஏழாவது முறையாக தொடர்ந்து பிரியாணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரியாணி வினாடிக்கு 2 ஆர்டர்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு நிமிடமும் பிரியாணிக்காக 137 ஆர்டர்களை வழங்கியுள்ளார்கள்.

அதிக ஆர்டர்

மேலும் சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் போன்றவை இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள். அதோடு இந்தியர்கள் இந்திய உணவை மட்டுமல்லாது இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன் மற்றும் சுஷி போன்ற உணவுகளையும்  ஆர்டர் செய்துள்ளனர்.

சிற்றுண்டி

அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 சிற்றுண்டிகள் பட்டியலில் சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு பிரைஸ், ஹாட் விங்ஸ், டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு பூண்டு ரொட்டி மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் போன்றவையுள்ளன. இதில் சமோசா  4 மில்லியன் ஆர்டர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் குலாப் ஜாமூன் 2.7 மில்லியன் ஆர்டர்கள், ரஸ்மலை 1.6 மில்லியன் ஆர்டர்கள், சோகோ லாவா கேக் 1 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here