மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நேரத்தில் மருத்துவமனையில் பணியில் இல்லாத மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

திடீர் ஆய்வு

கடந்த அக்டோபர் மாதம் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் உள்ள இரு மருத்துவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரு மருத்துவர்களையும் பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட்

இந்நிலையில், இன்று மதுராந்தகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த 4 மருத்துவர்களில் ஒருவரும் பணியில் இல்லை. இதனால் பணி நேரத்தில் பணியில் இல்லாத 4 மருத்துவர்களையும் பணியிடைநீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனை உரிய முறையில் செயல்படுகிறதா என ஆய்வு செய்யாத மருத்துவ இணை இயக்குநரையும் பணியிடமாற்றம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். ஒழுங்காகப் பணி செய்யாத அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அமைச்சர்களின் இந்த திடீர் ஆய்வு பயத்தைக் கொடுக்கும் வேளையில், பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here