விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 6-வது சீசனை பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்த டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, தனக்கான வட்டார மொழியில் பேசி போட்டியாளர்களையும், ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது “கலர் ஜட்டி தான் வேணும்” என அடம்பிடிக்கும் ஜிபி முத்துவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.