சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.38,648க்கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வாடிக்கையாளர்களையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ. 4,831க்கும், சவரன் ரூ.296 உயர்ந்து ரூ.38,648க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 40 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.72.80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.